எனக்கா லஞ்சம் தர., உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்த பரபரப்பு வழக்கு.!  - Seithipunal
Seithipunal


வழக்கறிஞருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்தது சம்பந்தமாக, இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை முக்கியமான சில கருத்துக்களை தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய உதவியாளர் குமாரவேல் என்பவர், வழக்கறிஞர் கண்ணன் என்பவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற உள்ளார். இதனை வாங்க மறுத்த கண்ணன், இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றையும் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி அவர்கள், "வழக்கறிஞர் கண்ணன் தொடர்ந்து உள்ள இந்த வழக்கு குறித்து உரிய விசாரணை நடத்தி, விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று, லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் அந்த உத்தரவில் சில முக்கிய கருத்துக்களையும் நீதிபதி புகழேந்தி அவர்கள் தெரிவித்துள்ளார். அதன்படி,

லஞ்சம் இந்த அளவுக்கு விரிவடைந்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று கருத்து தெரிவித்த நீதிபதி புகழேந்தி அவர்கள், தனக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்ததை நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு வந்த வழக்கறிஞர் கண்ணனுக்கு எனது பாராட்டுகள் என்றும் தெரிவித்தார்.

மேலும் லஞ்சம் கொடுக்கும் போது ஒவ்வொரு அரசு ஊழியரும், வழக்கறிஞர் கண்ணன் போல் தான் செயல்பட வேண்டும் என்றும் நீதிபதி புகழேந்தி அவர்கள் தனது கருத்தை ஆழமாகப் பதிவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bribery Case In Chennai HC Division


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->