சந்திரபாபு நாயுடு அமித்ஷாவுடன் சந்திப்பு!! பலவீனமாக உள்ள மாநிலங்களில் கூட்டணிக்கு பாஜக மும்முரம்!
Cantirapāpunāyuṭu amitṣāvuṭaṉ cantippu!! Palavīṉamāka uḷḷa mānilaṅkaḷil kūṭṭaṇikku pājaka mum'muram! Nāṭāḷumaṉṟa tērtal nērukku varum nilaiyil, araiciyal kāṭcikaḷ kūṭṭaṇi pēccavārttaiyil muṉaippu kāṭṭi varukiṉṟaṉa. Tērtalukkāṉa tēti inta māta iṟutiyil aṟ
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் முனைப்பு காட்டி வருகின்றன. தேர்தலுக்கான தேதி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து இரண்டு முறை வென்று ஆட்சி செய்து கொண்டிருக்கும் பாஜக மூன்றாவது முறையும் வென்று ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. எங்கெல்லாம் பா.ஜனதா கட்சி வலுவாக இல்லையோ அங்கெல்லாம் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
இதனை கருத்தில் கொண்டே பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்தை தனது கூட்டணியில் சேர்த்தது. இதே போல் ஆந்திராவிலும் தனது கூட்டணியை வலுப்படுத்த பா.ஜனதா தலைவர்கள் முயற்சி மேற்கொண்டு வந்தனர். இதுதொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியுடன் நடத்தி வந்த பேச்சுவார்த்தை இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
2014-ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் தெலுங்கு தேசம் அங்கம் வகித்தது. அப்போது தெலுங்குதேசம் 16 தொகுதிகளிலும், பா.ஜனதா கட்சி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருந்தன. 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் தெலுங்குதேசம் தனித்து போட்டியிட்டது குறிப்பிடத்தத்க்கது.
English Summary
Cantirapāpunāyuṭu amitṣāvuṭaṉ cantippu!! Palavīṉamāka uḷḷa mānilaṅkaḷil kūṭṭaṇikku pājaka mum'muram! Nāṭāḷumaṉṟa tērtal nērukku varum nilaiyil, araiciyal kāṭcikaḷ kūṭṭaṇi pēccavārttaiyil muṉaippu kāṭṭi varukiṉṟaṉa. Tērtalukkāṉa tēti inta māta iṟutiyil aṟ