#BREAKING || சர்ச்சைக்கு முற்றுப்புள்ள வைத்தது சி.பி.எஸ்.இ நிர்வாகம்.! அந்த கேள்வி நீக்கம்.! - Seithipunal
Seithipunal


சி.பி.எஸ்.இ 10-ஆம் வகுப்புத் தேர்வு (CBSE Board Exam) ஆங்கில வினாத்தாளில் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையிலான பிற்போக்குத்தனமான கருத்துகளைக் கொண்ட கேள்வி இடம் பெற்றிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

சி.பி.எஸ்.இ பாடப்புத்தகங்கள் மற்றும் வினாத்தாள்களில் அடிக்கடி இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெறுவதைத் தடுக்க அதன் நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வில் இடம் பெற்றிருந்த சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கப்படுவதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய கேள்விக்கு பதில் அளித்த அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்படும் எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று சர்ச்சைக்குரிய அந்த கேள்வியை நீக்கியதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

'பெண்கள் தங்கள் கணவருக்கு அடங்கி மரியாதை கொடுக்க வேண்டும்' என்ற பொருளில் அந்த கேள்வி இடம் பெற்றதால் இந்த சர்ச்சை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBSE BOARD EXAM Question Issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->