தனிநபரின் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக தடுப்பூசி செலுத்தவில்லை - மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்.! - Seithipunal
Seithipunal


நாட்டில் யாரையும் கட்டாயப்படுத்தி தடுப்பூசி போட சொல்லவில்லை என்று, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும், தடுப்பூசி சான்றிதழ்களை பொது இடங்களில் காண்பிக்கும் முறையிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், தொண்டு நிறுவனம் ஒன்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

இந்த வழக்கின் உச்ச நீதிமன்ற விசாரணையின்போது மத்திய அரசு ஒரு பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. 

மத்திய அரசின் அந்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "மத்திய சுகாதார அமைச்சகத்தின் தடுப்பூசி வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஒரு தனிநபரின் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்படவில்லை.

கொரோனா நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், மக்களின் நலன் கருதியும் இந்த தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பொது மக்களின் நலன் கருதி, இந்த தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்தி விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இதனை செயல்படுத்துவதற்காக தான் சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி சான்றிதழை கையோடு எடுத்துச் செல்லுமாறு எந்த ஒரு உத்தரவையும் மத்திய அரசு சார்பாக பிறப்பிக்கப்படவில்லை" என்று மத்திய அரசு அந்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central Govt Say About Corona Vaccine issue Jan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->