சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் - சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின்..! - Seithipunal
Seithipunal



தமிழகத்தில் சட்டசபை கூட்டத் தொடர் நடந்து வருகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவ உயிரிழப்பிற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக தொடர்ந்து சட்டசபையில் அமளியில் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து இந்த சட்டசபை கூட்டத் தொடர் முழுவதும் அதிமுக சபை நிகழ்வுகளில் பங்கேற்க சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்து உத்தரவிட்டு உள்ளார்.

இந்நிலையில் அதிமுக வெளியேறிய பின்பு, இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இட ஒதுக்கீடு தொடர்பான தனித் தீர்மானத்தை முன் மொழிந்தார். அப்போது முதலமைச்சர் பேசியதாவது, "திமுக சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரானது அல்ல. 

அனைத்து சமுதாய மக்களும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பது தான் திமுகவின் நிலைப்பாடு. மத்திய அரசு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துகிறது. கூடிய விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும்.

மேலும் தேசிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு உடனடியாக நடத்த வேண்டும்" என்று தெரிவித்தார். இதையடுத்து முதலமைச்சர் முன்மொழிந்த இந்த தீர்மானத்தின் மீது அவை உறுப்பினர்கள் விவாதம் நடத்தினர். 

முன்னதாக 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான விவாதம் நடைபெற்ற போது, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் எடுக்க கோரி மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் இந்த கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப் படும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Govt Should Conduct Caste Wise Census Says CM Stalin in Assembly


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->