உலகத் தமிழர்களை இணைக்கும் பாலம் - சிங்கப்பூரில் சம்பவம் செய்த பிரதமர் மோடி! நன்றி தெரிவித்த எல்.முருகன்! - Seithipunal
Seithipunal


சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ள, பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவரின் செய்தி குறிப்பில், உலகில் முதல் முறையாக சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ள, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்களுக்கு, உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்ற அனைத்து தமிழர்கள் சார்பாகவும் முதலில் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர்கள் பெருமை கொள்ளும் விதமாக அறிவித்துள்ள இந்த அறிவிப்பின் மூலமாக, பன்னெடுங்கால பழமை வாய்ந்த தமிழர் கலாச்சாரம் விண்ணளவு உயரும் என்கிற மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. 

பன்முகம் கொண்ட இந்தியாவின் பழமையான வரலாற்றில், உலகின் மிகவும் தொன்மையான மொழியாக தமிழ் இருந்து வருகிறது என்று எப்போதும் கூறி வரும் நமது பிரதமர் அவர்கள், தற்போது தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கிற முயற்சியாக எடுத்துள்ள இந்த நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

சிங்கப்பூரில் அமையவிருக்கிற இந்த கலாச்சார மையமானது, உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களை, மொழி, கலாச்சாரம் மற்றும் வரலாற்று ரீதியாக இணைக்கின்ற பாலமாக அமையும்.

பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு தேசங்களுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களை ஒன்றிணைக்கும் மையமாகவும், இந்த கலாச்சார மையம் செயல்படும்.  

முன்பு, பிரான்ஸ் நாட்டின் செர்ஜி நகர் உள்ளிட்ட வெளிநாடுகளில் அய்யன் திருவள்ளுவருக்கு சிலை வைத்தும், ஐநா சபை போன்ற உலகின் மாபெரும் அரங்குகளில் திருக்குறளையும், தமிழ் இலக்கிய வரிகளையும் குறிப்பிட்டு பெருமைப்படுத்தி வரும் நமது பாரத பிரதமர் அவர்களின் குறிப்பிடத்தக்க சாதனையாக இந்த அறிவிப்பை பார்க்கிறோம் என்று மத்திய இணை அமைச்சர் எம் முருகன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central minister l Murugan thanks to PM Modi for Singapore thiruvalluvar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->