வங்கியில் கடன் வாங்கி ஏமாற்றியவர்களுக்கு ஆப்பு., மக்களவையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாதவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

இன்று மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து பேசுகையில், "பிரதமர் மோடி தலைமையிலான அரசு முதல் முறையாக வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாதவர்களிடம் இருந்து பணத்தை வசூலித்து வருகிறது/

கடன் பெற்று ஏமாற்றியவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

முக்கியமாக வங்கிகளில் திரும்ப வராத கடன்களை தள்ளுபடி செய்வது என்பது முழுமையான தள்ளுபடி என்று அர்த்தமாகாது. வங்கிகள் ஒவ்வொரு கடன்கள் மீதும் நிலுவைத் தொகையை வசூலித்து வருகின்றன.

பொதுத்துறை வங்கிகள் கடனை செலுத்த அவர்களிடமிருந்து பொதுத்துறை வங்கிகள், அவர்களின் சொத்துக்களை கையகப்படுத்தி வருகின்றன.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது அரசியல் காரணங்களுக்காக கடன் வழங்கப்பட்டது, ஆனால் அந்த கடனை திரும்ப செலுத்தாதவர்களிடமிருந்து எந்த பணமும் மீட்கப்படவில்லை. 

இதுதான் உண்மை, இதனை எதிர்க்கட்சிகள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன், ஏற்றுக்கொள்ள வேண்டும்"

இவ்வாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central minister say about bank loan issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->