மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட தமிழகம்.! சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு.! - Seithipunal
Seithipunal


மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகம் சார்பில் 2020ம் ஆண்டுக்கான தேசிய நீர் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு 3வது இடம் கிடைத்துள்ளது.

மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் கடந்த 2020 விருதுகள் : நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலமாக முதலிடத்தில் உத்திரபிரதேச மாநிலம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் ராஜஸ்தான் மாநிலம் பிடித்துள்ளது. மூன்றாவதாக தமிழகம் சிறந்த நீர் மேலாண்மை விருதுக்கான விருதை பெற்றுள்ளது.

மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகத்தின் சார்பில் நீர் மேலாண்மை சிறந்து விளங்கக்கூடிய மாநிலங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. மூன்றாவது ஆண்டாக கடந்த 2020ம் ஆண்டுக்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் இந்த விருதுகளை இன்று தலைநகர் டெல்லியில் அறிவித்துள்ளார். இந்த பட்டியலில் ஒட்டுமொத்தமாக நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய மாநிலங்களின் பட்டியலில் இந்த முறை உத்தரபிரதேச மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் ராஜஸ்தான் மாநிலமும், மூன்றாவது இடத்தில் தமிழகம் பிடித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு தமிழக மாநிலம் இதே பிரிவில் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Ministry of Water power Award 2020


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->