கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் படுகொலை : துக்கம் விசாரிக்க சென்ற முன்னாள் முதல்வர் மகன் மீது கல்வீச்சு.!
chandrababu son attacked
ஆந்திரா மாநிலம், குண்டூர் மாவட்டம் துக்கிராலா தும்மலபுடி என்னும் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசராவ். இவரது மனைவி லட்சுமி திருப்பத்தம்மா. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வெங்கட் சாய் சதீஷிர்க்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
நேற்று முன்தினம் லட்சுமி திருப்பத்தம்மா வீட்டிற்கு வெங்கட் சாய் சதீஷ், சிவசக்தி சாய்ராம் இருவரும் சென்றனர். முதலில் வெங்கட் சாய் சதீஷ் வீட்டிற்குள் சென்று வந்தார். பின்னர், சிவசக்தி வீட்டிற்குள் சென்று, லட்சுமி திருப்பத்தம்மாவை தனது ஆசைக்கு இணங்கும்படி வறுப்புறுத்தினார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சாய்ராம், லட்சுமி திருப்பத்தம்மாவை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு கழுத்தை இறுக்கியதில் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதன் பின்னர், லட்சுமி திருப்பத்தம்மாவின் செல்போனை எடுத்துக்கொண்டு இருவரும் தப்பி ஓடினர்.
இந்த குறித்து தகவலரிந்த தும்மலுபுடி காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அப்பகுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், செல்போன் எண்ணை சோதனை செய்த காவல்துறையினர், அவர்களை கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
லட்சுமி திருப்பத்தம்மாவின் வீட்டிற்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாராலோகேஷ் சென்றார். அப்போது, அவர் மீது தெலுங்கு தேச தொண்டர்கள் கல் வீசினர். பின்னர், இரண்டு கட்சி தொண்டர்களும் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினரின் மேல் கல் விழுந்து தலையில் ரத்தம் கொட்டியது. காவல்துறையினர், 2 கட்சி தொண்டர்களிடமும் பேச்சி வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.