#BREAKING : பாஜகவுக்கு எதிராக தேசியக் கட்சியை அறிவித்த சந்திரசேகர் ராவ்.. நைஸாக உள் நுழையும் திருமா.!
Chandrasekar Rao announced national party
தேசிய அளவிலான அரசியலில் கவனம் செலுத்திடும் முயற்சியில் இறங்கியுள்ள தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ், தனது கட்சியை தேசிய கட்சியாக மாற்றி அதன் பெயரை அறிவித்ததுள்ளார்.
பாஜகவுக்கு எதிராக விரைவில் தேசிய கட்சி தொடங்கப்படும் என்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் தெரிவித்திருந்தார்.
அதன்படி, வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் பணியில் தெலுங்கானா மாநில முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், விரைவில் தேசிய கட்சி தொடங்கப் போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அப்போது அவர், தெலுங்கானா இயக்கத்தை தொடங்குவதற்கு முன்பு செய்ததுபோல், அறிவுஜீவிகள், பொருளாதார நிபுணர்கள், பல்துறை நிபுணர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினோம்.
அதில், தேசிய அளவில் மாற்று கட்சி தொடங்குவது குறித்து கருத்து ஒற்றுமை ஏற்பட்டதை அடுத்து விரைவில் தேசிய கட்சி தொடங்கப்படும் என்றும் அதற்கான கொள்கைகள் வகுக்கும் பணிகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை பாரத் ராஷ்டிர சமிதி என பெயர் மாற்றம் செய்து தேசிய கட்சியாக அறிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பியுமான திருமாவளவனும் கலந்து கொண்டார்.
English Summary
Chandrasekar Rao announced national party