₹400க்கு கேஸ் சிலிண்டர்; தொழில் துவங்க ₹10 லட்சம்!! வாக்குறுதிகளை வாரி இறைக்கு பி.ஆர்.எஸ்!!
Chandrasekar Rao announced Telangana state elections manifesto
தெலுங்கானா மாநில சட்டமன்ற பொது தேர்தல் வரும் நவம்பர் 30ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. தெலுங்கானாவை ஆளும் பாரத ராஷ்ட்ரிய ஸமிதி கட்சி தலைவரும் தெலுங்கானா மாநிலம் முதலமைச்சருமான சந்திரசேகர ராவ் தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதியை இன்று வெளியிட்டுள்ளார்.
அதன்படி,
1) அன்னபூர்ணா திட்ட குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் அரிசி வழங்கும் திட்டம்.
2) ஆசாரா ஓய்வூதியது 2000 ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.
3) ஓய்வூதியம் ஆண்டுதோறும் 500 ரூபாய் என மொத்தமாக 5 ஆண்டுகளில் 5000 ரூபாயாக உயர்த்தப்படும்.
4) தெலுங்கானா மாநிலத்தில் கேஸ் சிலிண்டர் 400 ரூபாய்க்கு விற்கப்படும்.
5) புதிதாக தொழில் துவங்குபவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
6) கேசிஆர் பீமா திட்டத்தின் கீழ் 93 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
7) 6000 ரூபாய் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம், 15 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.
என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட சந்திரசேகர ராவ் கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 99 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் எனவும், தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத பல திட்டங்கள் அமைச்சரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
English Summary
Chandrasekar Rao announced Telangana state elections manifesto