தமிழகத்தில் அமைச்சரவை மாற்றமா..?! வெளியான புதிய தகவல்..! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முன்னதாக தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதியே மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்துவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது.

எனவே இதைக் கருத்தில் கொண்டு கட்சி நிர்வாகத்திலும், அமைச்சரவையிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர முதலமைச்சரும், திமுக கட்சித் தலைவருமான மு. க. ஸ்டாலின் முடிவெடுத்துளளதாகத் தெரிகிறது. தமிழகத்தில் ஆட்சியைத் தக்க வைப்பதற்கான யோசனையில் திமுக அரசு உள்ளது.

இதையடுத்து அமைச்சர் உதயநிதிக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மக்களவைத் தேர்தலின்போது வாக்குகள் குறையும் இடங்களில் அந்தந்த நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கூறியிருந்தார். 

அதன்படி ஜூன் 4 ம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு, தமிழக அமைச்சரவையில் மாற்றம், கட்சி மாவட்ட செயலாளர்கள் மாற்றம் என்று கட்சித்தலைமை அதிரடி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பெரும்பாலும் அமைச்சர்களே மாவட்டச் செயலாளர்களாக உள்ள நிலையில், இந்த முடிவு சீனியர் அமைச்சர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. இந்த முறை சட்டமன்ற தேர்தலுக்கான களப்பணியில் திமுகவில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Changes will announce in TN Ministry


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->