காதலிக்க மறுக்கும் பெண்களின் மீது நடக்கும் தாக்குதல் சம்பவங்கள் கடும் கண்டனத்துக்குரியது - சென்னை உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


காதலிக்க மறுக்கும் பெண்களின் மீது நடக்கும் தாக்குதல் சம்பவங்கள், பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது என்று, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்து உள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த 22 வயது இளம்பெண் ஒருவரை, திருப்பூரைச் சேர்ந்த அரவிந்த் குமார் என்பவர், தன்னை காதலிக்க வேண்டும் என்று தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

அரவிந்தை காதலிக்க மறுத்த அந்த பெண், சென்னை கோயம்பேடு நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் போது, தகராறில் ஈடுபட்ட ஈடுபட்ட அரவிந்த் குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவர் மீது சரமாரியாக வெட்டியுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்தில், கோயம்பேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், குற்றவாளி அரவிந்த் குமார் மீதான குற்றச்சாட்டு சட்ட பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிரான சாட்சிகள் வலுவாக உள்ளது. அவருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தேற்பத்தித்து உத்தரவிட்டது.

மேலும், இந்த வழக்கு விசாரணையின் போதுm காதலிக்க மறுக்கும் பெண்கள் தாக்கப்படும் சம்பவங்கள் கடும் கண்டனத்துக்குரியது என்றும், இதுபோன்ற சம்பவங்கள் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியில் அச்சத்தையும் பெண்களின் முன்னேற்றத்துக்கு தடையாக உள்ளது. இது போன்ற சம்பவங்களை சகித்துக்கொள்ள முடியாது, இது போன்ற சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்" என்று நீதிபதி கருத்து தெரிவித்து உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai hc say about one side love attack issue


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->