திருவண்ணாமலை: மே 15க்குள் கடைசி நாளாக தமிழ்ப் பெயர் பலகை – ஆட்சியர் உத்தரவு!
Thiruvannamalai Tamil Name Board
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தொழிற்சாலைகள், பள்ளி-கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் பெயர் பலகைகள் கட்டாயமாக தமிழில் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார்.
அதன் பேரில், தமிழில் பெயர் பலகை வைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், தமிழில் உள்ள எழுத்துகளை விட ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகள் சிறிய அளவிலேயே இருக்க வேண்டும் என்றும் ஆட்சியர் தனது உத்தரவில் தெரிவித்தார்.
மேலும், தமிழ் பெயர் பலகைகள் விதிமுறைகளுக்கு இணங்க உள்ளதா? என்பது மேற்பார்வையிட அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. பெயர் பலகைகள் தமிழில் இல்லையென்றால், அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கான கடைசி நாள் வரும் மே 15 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாளுக்குள் மாவட்டம் முழுவதும் தமிழ்ப் பெயர் பலகை உள்ளதா? என்பது பரிசோதிக்கப்படும் எனவும் ஆட்சியர் கூறியுள்ளார்.
English Summary
Thiruvannamalai Tamil Name Board