கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் புதிய கட்டுமானம் - அதிரடியாக தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


யுனெஸ்கோவால் மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள கங்கைகொண்ட சோழபுரம் கோவிலின் பாதுகாக்கப்பட்ட பகுதியில், கட்டுமானப் பணிகளை தடை செய்ய கோரி, பாலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

அவரின் அந்த மனுவில், "கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் தொல்லியல் துறை சார்பாக மூன்று கோடி ரூபாய் செலவில் புத்தக நிலையம், உணவகம், கழிப்பறைகள் கட்டப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின.

பாதுகாக்கப்பட்ட இந்த கோவிலில் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள அனுமதி பெற வேண்டும். அனுமதி இல்லாமல் கட்டுமானங்களை மேற்கொள்வதற்கு தடை விதிக்க வேண்டும். வேண்டுமானால், இந்த மூன்று கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள கட்டுமானங்களை கோவிலுக்கு வெளிப்பகுதியில் செய்து கொள்ளலாம்" என்று அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் கட்டுமான பணிகளை செய்வதற்கு அனுமதி பெறப்பட்டதா? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று, மத்திய தொல்லியல் துறைக்கும், இந்து அறநிலையத் துறைக்கும் உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.

இன்னைலயில், இன்று இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், அறநிலையத்துறை, தொல்லியல் துறை தாக்கல் செய்ய அறிக்கையை படித்து பார்த்தனர்.

பின்னர், "தொல்லியல் ஆய்வுத் துறை தான் உருவாக்கிய விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு, புராதான சின்னமாக அறிவிக்கப்பட்ட கோவிலில், 38 மீட்டரில் கட்டுமானங்களை மேற்கொள்ள இருப்பதை இந்த  நீதிமன்றம் அனுமதிக்காது" முடியாது என்று நீதிபதிகள் கூறினர்.

மேலும், கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்களை மேற்கொள்ள தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து விரிவான பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்று, தொல்லியல் ஆய்வுத் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CHENNAI HC SAY GANGAIKONDA CHOLAPURAM TEMPLE New Construction


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->