இந்து பெண்கள் குறித்து அவதூறு! திருமாவளவன் மீதான வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Chennai High court Thirumavalavan VCK Hindu womans
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது, இந்து பெண்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக 2020-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் திருமாவளவனுக்கு எதிராக 6 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.
மனுஸ்மிருதியில் பெண்கள் எப்படி சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்பதை பற்றியே தாம் கருத்து தெரிவித்ததாகவும், பெண்களை இழிவுபடுத்தும் நோக்குடன் எந்தவிதமான வார்த்தைகளையும் கூறவில்லை என திருமாவளவன் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்திருந்தார்.
இதனை பரிசீலித்த நீதிபதி வேல்முருகன், திருமாவளவனுக்கு மனுதாரரிடம் எந்தவிதப் பகை நோக்கும் இல்லை என்பதையும், அவதூறு குற்றச்சாட்டுக்கு ஆதாரமற்றதையும் கருத்தில் கொண்டு, வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.
English Summary
Chennai High court Thirumavalavan VCK Hindu womans