மேயர் பிரியாவின் அதிகார அராஜகமா? லிப் ஸ்டிக் போட்டதுக்காக பணியிட மாற்றம் - பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் மாதவி பணியிட மாற்றம் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

உரிய நேரத்தில் பணிக்கு வராதது, அலுவலக உத்தரவை பின்பற்றாதது ஆகிய காரணங்களால் மாதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மகளிர் தினத்தின் போது பேஷன் ஷோவில்  டபேதார் மாதவி மேட் லிப்ஸ்டிக் அணிந்திருந்தார். மேலும் இதுபோன்ற ஷேடுகளில் லிப்ஸ்டிக் போட வேண்டாம் என்று மேயரின் பி.ஏ தெரிவித்ததாக சொல்லப்பட்டது.

இருப்பினும், மாதவியின் இடமாற்றத்துக்கும், இந்த லிப்ஸ்டிக் விவாகரத்துக்கு சம்பந்தமில்லை மேயர் மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள டபேதார் மாதவி, மேயர் பிரியாவுக்கு இணையாக லிப்ஸ்டிக் போட்டதால் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளேன். 

இது ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி மனித உரிமை மீறல். 15 ஆண்டுகளாக மாநகராட்சியில் பணிபுரியும் நிலையில் எனது வேலையில் எவ்விதமான தொய்வும் இருந்ததில்லை. 

எனக்கு லிப்ஸ்டிக் போடுவது மிகவும் பிடிக்கும் ஐந்து வயதில் இருந்தே லிப்ஸ்டிக் போடும் பழக்கம் உண்டு. மேயர் பிரியா போடக்கூடிய லிப்ஸ்டிக்கை நானும் போடக்கூடாது என்று என்னிடம் அறிவுறுத்தினார்கள்.

இதேபோல உடன் பணி புரியும் சில பெண்களுக்கும் அறிவுறுத்தல்கள் இருந்தது. மேலும் பணியிடத்தில் எந்த ஒரு பெண் ஊழியரும் மற்றொரு பெண் ஊழியருடன் பேசக்கூடாது என்ற ஒரு வாய்மொழி உத்தரவும் இருந்ததாக டபேதார் மாதவி பேட்டி அளித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் சமூக வலைதள வாசிகளின் கருத்துக்கள் பின்வருமாறு:



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennaii Mayor Priya LipStrick Madhavi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->