அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி தீவிர ஆலோசனை.! - Seithipunal
Seithipunal


வருகின்ற மக்களவைத் தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. 

இது குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்பதற்காக இன்று சென்னை தலைமை செயலகத்தில் கூட்டம் நடைபெற்றது. அரசியல் கட்சி தலைவர்களுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். 

அங்கீகரிக்கப்பட்டுள்ள 10 அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன. 

தேர்தல் முறைபாடுகள், பிரச்சாரத்தின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chief Electoral Officer consultation with political parties


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->