முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்.!!
Chief Minister MKStalin has viral fever
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நேற்று முதல் இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறி தென்பட்டதால் பரிசோதனை மேற்கொண்டார். இந்த பரிசோதனையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவர்கள் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சில நாட்களுக்கு ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
நேற்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முழுவதும் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதேபோன்று இன்று காலை நடைபெற இருந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். நாளை திருவள்ளூரில் நடைபெற உள்ள கட்சி நிகழ்ச்சியில் மு.க ஸ்டாலின் பங்குபெறுவது சந்தேகம் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Chief Minister MKStalin has viral fever