மீண்டும் நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம்; சமத்துவ பொங்கல் விழாவில் முதலமைச்சர் பேச்சு..! - Seithipunal
Seithipunal


''தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில் இன்னும் ஒன்று இரண்டு நிறைவேற்றப்படவில்லை எனவும், அதனை விரைவில் நிறைவேற்றுவோம்'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதனை சென்னை கொளத்தூரில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன், அவர் பேசுகையில், கொளத்தூரில் நடக்கும் விழாவில் கலந்து கொள்வது சிறப்பு. பொங்கல் விழாவில் கலந்துகொள்வது சிறப்பிலும் சிறப்பு. எனக்கும் பூரிப்பாக உள்ளது.

மேடை மட்டும் இல்லாமல் இருந்தால் விசில் அடித்து கைதட்டி, உங்கள் அன்பில் நானும் கலந்து கொண்டு இருப்பேன்.எனக்கு உற்சாகம் வேண்டும் என்றாலும், ஓய்வெடுக்கவும் கொளத்தூர் வருவேன். 

தமிழர்களுக்கு என இருக்கக்கூடிய விழா பொங்கல் விழா. பொங்கலையும் தி.மு.க.,வையும் பிரிக்க முடியாது. என்னையையும் கொளத்தூரையும் பிரிக்க முடியாது.

திராவிட இயக்கத்தை பொறுத்தவரை உற்சாகத்தோடும் கொண்டாடும் விழா. மற்ற விழாக்களுக்கு மதம், ஜாதி இருக்கும். பொங்கல் விழாவிற்கு மட்டும் மதம் ஜாதி இருக்காது. தமிழ் ஜாதி தான் இருக்கும். தமிழர் திருநாள் இது. வன்முறை கிடையாது. நம்முடைய உழைப்பை போற்றுகிற, ஏழை எளிய மக்கள், விவசாய மக்கள்,ஒட்டுமொத்த தமிழர்கள் கொண்டாடும் விழாவாக இவ்விழா அமைந்துள்ளது. வீரமும், விவேகமும் கொண்ட விழாவாக உள்ளது.

யார் யாரோ ஈ.வெ.ரா.,வை பற்றி பேசிக்கிட்டு இருக்கானுங்க. அவரை விமர்சனம் செய்யக்கூடியவர்களை பற்றி பேசி நான் அவர்களுக்கு அடையாளம் காட்ட விரும்பவில்லை. பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட 17 ம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றினோம். இன்னும் ஒன்று இரண்டு உள்ளது. அதனை மறுக்கவில்லை. சட்டசபையிலும் இதனைக் கூறியுள்ளேன். விரைவில் அதனையும் நிறைவேற்றுவோம்.

இந்த ஆட்சிக்கு நீங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும். இந்த நம்பிக்கையில் 07 வது முறை மீண்டும் நாம் தான் ஆட்சிக்கு வருவோம் எனக்கூறியுள்ளேன். 

ஆட்சிக்கு வர வேண்டும். பதவி சுகம் அனுபவிக்க வேண்டும். பந்தாவாக இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல. உறுதியாக சொல்கிறேன் அதற்காக அல்ல. மக்களுக்கு பணியாற்ற. மக்களுக்கு தொண்டாற்ற.கருணாநிதி, எனக்கு ஸ்டாலின் என பெயர் வைத்தார். அதன் பிறகு உழைப்பு என என்னை சொன்னார். இவ்வாறு ஸ்டாலின் மேலும் பேசியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister speech at the Samathuva Pongal festival


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->