சாலையில் 04 கி.மீ தூரம் நடந்து சென்ற முதல்வர் ஸ்டாலின்; காரைக்குடி மக்கள் வெள்ளம்..! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் ஸ்டாலின் காரைக்குடி சென்றுள்ளார். அங்கு அவர் சாலையில் சுமார் 4 கி.மீ., தூரம் நடந்து சென்று மக்களை சந்தித்துள்ளார்.

தமிழக அரசு திட்டங்கள் குறித்து கள ஆய்வு செய்ய முதல்வர் ஸ்டாலின், இரண்டு நாள் பயணமாக சிவகங்கை சென்றுள்ளார். அத்துடன், இன்று காலை, காரைக்குடி அழகப்பா பல்கலை வளாகத்தில் கட்டப்பட்ட தமிழ் நூலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு,  திருவள்ளுவர் சிலையை திறந்து வைதுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தி.மு.க., கட்சிப்பணிகள் குறித்து ஆய்வு செய்ய தனியார் திருமண மண்டபத்திற்கு கிளம்பியுள்ளார். அப்போது அழகப்பா பல்கலை வாயிலில் இருந்து கல்லூரிச் சாலை, தேவர் சிலை வழியாக கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் தனியார் மஹால் வரை 04 கி.மீ., தூரம் நடந்து சென்றுள்ளார்.  

வழியில் ஸ்டாலினை வரவேற்க பலர் காத்திருந்துள்ளனர். வழியில் நின்றிருந்த மக்களுடன் கைகுலுக்கிய அவர், அவர்கள் அளித்த பூங்கொத்துகளையும் பெற்றுக் கொண்டுள்ளார். அதேநேரத்தில் சிலர் முதல்வருடன் செல்பி எடுத்துக் கொண்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chief Minister Stalin walked 04 km on the road


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->