பெரும் பரபரப்பு.. ராமநாதபுரம் தொகுதி திமுக எம்.பி, அமைச்சர் இடையே மோதல்...!!
Clash between Ramanathapuram DMK MP and Minister
திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து அரசியல் அதிகாரம் செலுத்துவதில் திமுக நிர்வாகிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் திமுக மாவட்ட செயலாளர்கள் இடையே உரசல் போக்கு நிலவி வருகிறது. சமீபத்தில் நெல்லை திமுக மாவட்ட செயலாளர் இடையே ஏற்பட்ட மோதலை திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி நேரில் சென்று சமாதானம் செய்து வைத்தார்.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
ராமநாதபுரத்தில் நடந்த அரசு விழாவின்போது நிகழ்ச்சி தொடங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ராமநாதபுரம் தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் மோதிக்கொண்டனர். இதன் காரணமாக இருவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்ற ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை திமுகவினர் கீழே தள்ளியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Clash between Ramanathapuram DMK MP and Minister