#சென்னை || விசிக-புரட்சி பாரதம் நிர்வாகிகள் இடையே மோதல்.!! தலைநகரில் பதற்றம்.!! - Seithipunal
Seithipunal


சென்னை விருகம்பாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்கும், புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஆதவன் என்பவர் விருகம்பாக்கம் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை சென்று கொண்டிருந்த போது புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் வைக்கப்பட்ட பேனர் மீது மோதியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்தவர்கள் ஆதவனிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் இருதரப்பினரும் ஆட்களை கூட்டி வந்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த மோதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைப்பில் 3 பெண்களும், புரட்சி பாரதம் தரப்பில் 4 பேரும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Clash between vck Puratchi Bhartham cadres


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->