த.வெ.கவுடன் கூட்டணி வைக்கும் கதவை மூடினேன்... நீங்கள் நினைக்கிற சராசரி அரசியல்வாதி அல்ல நான்...! - தொல். திருமாவளவன் - Seithipunal
Seithipunal


விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்  தலைவர் தொல்.திருமாவளவன், புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது தேர்தல் கூட்டணி குறித்து அனைவர் முன்னிலையிலும் உரையாடினார்.

தொல்.திருமாவளவன்:

அதில் அவர் தெரிவித்ததாவது,"பாஜக இடம் பெற்றுள்ள கூட்டணியில் விசிக இடம்பெறாது. அதனால் எந்த பாதிப்பு வந்தாலும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.

விஜய் கலந்துகொண்ட விகடன் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டால் குழப்பம் வந்துவிடும் என்பதனாலும், அது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்பதனாலும் அந்த விழாவையே புறக்கணித்தவன் நான்.

த.வெ.கவுடன் சேரும் வாய்ப்பும் எங்களுக்கு இருந்தது. ஆனால் அந்த கதவையும் நான் மூடினேன்.அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் துணை முதல் அமைச்சர் பதவி கேட்கலாம், கூடுதலாக 3 அல்லது 4 அமைச்சர் பதவியையும் கேட்கலாம் என்று சிலர் ஆசை காட்டியதுண்டு.

நீங்கள் நினைக்கிற சராசரி அரசியல்வாதி அல்ல இந்த திருமாவளவன். இந்த ஆசைகளால் திருமாவளவனை வீழ்த்திவிட முடியாது என்பதை உறுதிப்படுத்திக்கொள்கிறேன்' எனத் தெரிவித்தார்.இது தற்போது அரசியல் ஆர்வலர்களிகையே பேசுபொருளாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

closed door forming alliance with average politician you think Thol Thirumavalavan


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->