அப்படியென்றால் மீண்டும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொன்முடியின் பேச்சை ரசித்து ஆதரிக்கிறாரா? - பா. வளர்மதி - Seithipunal
Seithipunal


அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து அவதூறாக பேசியதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவரது அமைச்சர் பதவியை பறிக்க கோரியும், மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மகளிரணி சார்பில் மதுரை செல்லூர் 60 அடி சாலையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, பா.வளர்மதி ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், சர்ச்சையாக பேசிய அமைச்சர் பொன்முடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் அல்லது அமைச்சர் பொன்முடியே தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும் என கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

மேலும், ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் பொன்முடியை கண்டிக்கும் வகையில் மகளிரணியினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அமைச்சர் பா.வளர்மதி:

இதில்,ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தெரிவித்ததாவது,"பெண்களை இழிவுபடுத்துவது என்பது தி.மு.க.விற்கு கைவந்த கலையாகவுள்ளது. தி.மு.க.வினர் தமிழக பெண்களை தொடர்ந்து இழிவுபடுத்தி பேசி வருகிறார்கள்.

சட்டப்பேரவைக்கு சென்ற ஜெயலலிதாவை சேலையை பிடித்து இழுத்து திமுகவினர் அவமானப்படுத்தினர்.அமைச்சர் பொன்முடி விஷயத்தில் மக்கள், நீதிமன்றம் கண்டித்த பின்னரும் அமைச்சர் பொன்முடி மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை.

அப்படி என்றால் மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்முடியின் பேச்சை ரசித்து ஆதரிக்கிறார் என நினைக்கிறேன். இதற்கு தமிழக மக்கள் தக்க நேரத்தில் தக்க பதிலடியை கொடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.இதற்கு பலதரப்பிலிருந்து ஆதரவு எழுந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM MK Stalin again enjoying and supporting Ponmudi speech P Valarmathi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->