இதயம் அதிர்ந்து நொறுங்கி நின்ற முக ஸ்டாலின்! சோகத்தில் மூழ்கிய கோபாலபுரம்! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் மருமகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் இன்று காலமானார்.

இவரின் மறைவுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "முரசொலி செல்வம் மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி கேட்டு இதயம் அதிர்ந்து நொறுங்கி விட்டேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை செல்வம் மறைந்தார்.

அன்பின் திருவுருவம், திராவிட இயக்கத்தின் படைக்கலன் முரசொலி செல்வம். திமுகவுடன் ஆன என் வளர்ச்சியை தோளோடு தோல் நின்றவர். பேரன்புக்குரிய அண்ணன் முரசொலி செல்வம் கலைஞர் பிரிந்த பிறகு நான் சாய்வதற்கு கிடைத்த கடைசி தோளை, கொள்கை துணை இழந்து நிற்கிறேன்.

அதிர்ந்து பேசாதவர், ஆழமான கொள்கைவாதி, நெருக்கடி காலங்களில் தெளிவான தீர்வை தந்தவர். கட்டுரைகள் மூலம் இளைய தலைமுறைக்கு கொள்கை ரத்தம் பாய்ச்சியவர் முரசொலி செல்வம். 

முரசொலி ஆசிரியராக பொறுப்பேற்று தன் எழுத்துகளால் ஜனநாயக குரலாக ஒலித்தவர் முரசொலி செல்வம். சிலந்தி என்ற பெயரில் முரசொலையில் நையாண்டியும் நகைச்சுவையும் ததும்பும் கட்டுரைகளை எழுதியவர் அவர் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM MKStalin Condolence Murasoli Selvam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->