இலங்கையில் அமைச்சர்களுக்கான சலுகைகளை அதிரடியாக குறைத்த அந்நாட்டு ஜனாதிபதி..!
The president of the country who drastically reduced the privileges for ministers in Sri Lanka
இலங்கையில், ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க தலைமையில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஆட்சி நடக்கிறது.
அந்நாட்டில், இலங்கை பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி மற்றும், பிரதமர் போன்ற பதவிகளை ஏற்கனவே வகித்தவர்.
கொழும்பு அரசு இல்லத்தில் அவர் வசித்து வரும் நிலையில், அதை காலி செய்யும் படியும், இல்லையெனில் வாடகை செலுத்தும் படியும், அவருக்கு இலங்கை அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.
இந்நிலையில், இலங்கை ஜனாதிபதி அனுரா குமார திசநாயக்க நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், கேபினட் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களுக்கு, அரசு சார்பில் இரு வாகனங்கள் மட்டுமே வழங்கப்படும். கேபினட் அமைச்சருக்கான ஊழியர்கள் 15 ஆகவும், துணை அமைச்சருக்கான ஊழியர்கள் 12 ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ளன.
தனி செயலாளர், ஊடக செயலாளர்அல்லது மக்கள் தொடர்புசெயலாளர் போன்ற பதவிகளில், குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கிய உறவினர்களை நியமிக்கக் கூடாது.
அரசின் செலவுகளை குறைப்பதே இந்த கட்டுப்பாடுகளின் நோக்கம் என்று அவருடைய அறிக்கையில் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
The president of the country who drastically reduced the privileges for ministers in Sri Lanka