குழந்தை திருமணத்தை ஆளுநர் ஆதரிக்கிறாரா.!! முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு சந்தேகம்..!! - Seithipunal
Seithipunal


திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் பல்லாவரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர் "தமிழகம் முழுவதும் 1222 இடங்களில் மூன்று நாட்கள் திராவிட மாடல் அரசின் இரண்டு சாதனை பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். 

இதுவரை 3 நாட்களில் இவ்வளவு கூட்டங்கள் நடத்தியதில்லை. விழுந்து கிடந்த சமுதாயத்தை காக்க வந்தவர் பேரறிஞர் அண்ணா. தமிழகம் கடந்த 10 ஆண்டுகளாக பால் பட்டு கிடந்தது. தமிழக ஆளுநர் ரவி திராவிடம் காலாவதியானது என கூறுகிறார். அவருக்கு சொல்கிறேன் சனாதனம் வர்ணாசிரமம் தான் காலாவதியானது.

ஆரியத்தை வீழ்தும் சக்தி திராவிடத்திற்கு மட்டும்தான் உண்டு. அதனால்தான் ஆளுநர் ரவி பயப்படுகிறார். சிதம்பரத்தில் குழந்தை திருமணம் நடந்ததற்கான ஆதாரம் இருந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. குழந்தை திருமணம் விவகாரத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள் திருமணத்தை தடுக்கும் நடவடிக்கையில் சட்டம் அனைவருக்கும் சமமானது.

இந்த விவகாரத்தில் யார் மீதும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்கிறாரா ஆளுநர்.? சிதம்பரம் குழந்தை திருமணம் விவகாரத்தில் ஆளுநருக்கு ஏற்கனவே பதில் அனுப்பியுள்ளோம். பெண்களுக்கு 7, 8 வயதில் திருமணம் செய்த சனாதன காலத்தை உருவாக்க நினைக்கிறாரா ஆளுநர்..? 13 வயது சிறுமிக்கும் 15 வயது சிறுவனுக்கும் திருமணம் செய்து வைத்தால் தவறு. தமிழக ஆளுநர் குழந்தைகள் திருமணத்தை ஆதரிக்கிறாரா..? என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சந்தேகத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM MKStalin has doubts governor support child marriage


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->