மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது "எனக்கு என்ன குறை?" - முதல்வர் மு.க ஸ்டாலின் பெருமிதம்.!!
CM MKStalin pride Tamil Nadu people are happy
தமிழ் நாடு அரசு சார்பில் சென்னையில் நடைபெற்றுவரும் அயலகத் தமிழர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் பேசிய அவர் "தமிழ்நாடு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது எனக்கு என்ன குறை? வெள்ள நிவாரணம், மகளிர் உரிமைத்தொகை பெற்ற பெண்களின் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடர்ந்து அயலக தமிழர் தின விழாவை கொண்டாடுவதில் பெருமை அடைகிறேன்.
வெளிநாட்டில் கைது செய்யப்படும் போது தமிழர்களுக்கு உரிய சட்ட உதவி வழங்கப்படுகிறது. தமிழர்களின் மகிழ்ச்சியே எனக்கு போதும். எனக்கு உடல்நிலை சரியில்லை என சிலர் கூறுவதை பார்க்கும்போது சிரிப்புதான் வருகிறது. தமிழர்களும் தமிழ்நாடும் மகிழ்ச்சியாக இருப்பதே எனக்கு போதும் தமிழர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கும்போது எனக்கு என்ன குறை இருந்துவிடப் போகிறது? எனது சக்தியை மீறி தமிழ்நாடு மக்களுக்காக உழைக்கிறேன். மக்களைப் பற்றியே எப்போதும் நினைக்கிறேன். என்னைப் பற்றி நினைப்பதில்லை" என பேசியுள்ளார்.
English Summary
CM MKStalin pride Tamil Nadu people are happy