கர்ப்பிணி பெண்ணின் பெயர், முகவரியை வெளியிட்ட CM ஸ்டாலின்! கொஞ்சம் கூட பொறுப்பு இல்லையா? அதிமுக கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal



வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம், சீதாராமன்பேட்டை அருகில் இரயில் பெட்டியிலிருந்து கீழே தள்ளிவிட்டு பலத்த காயமடைந்த கர்பிணிப் பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின், நிதியுதவி - மருத்துவ சிகிச்சை செலவு முழுவதையும் தமிழ் நாடு அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அந்த அறிவிப்பில், "திருப்பூர் மாவட்டத்தில், வசித்துவரும் நான்கு மாத கர்ப்பிணிப் பெண் தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக கடந்த 06.02.2025 அன்று பிற்பகல் கோயம்புத்தூர் - திருப்பதி விரைவு இயிலில் பெண்களுக்கான பெட்டியில் பயணித்தபோது, ஜோலார்பேட்டை இரயில் நிலையத்தில் அப்பெட்டியில் ஏறிய கே.வி.குப்பம். பூஞ்சோலை கிராமம். சின்ன நாகல் பகுதியைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவன் அப்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்று அப்பெண்ணைத் தாக்கி, வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம், சீதாராமன் பேட்டை அருகில் ஓடும் இரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டதில் அந்தப் பெண் பலத்த காயம் அடைந்துள்ளார். 

அதன் தொடர்ச்சியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்தப் பெண்ணிற்கு நேற்று (8.2.2025) கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இச்சம்பவத்தில் காயமடைந்து வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக இராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அப்பெண்ணிற்கு உயர் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அப்பெண்ணின் முழு மருத்துவச் செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.

இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி ஹேமராஜ் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அப்பெண்ணின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இந்த அறிவிப்பில், சட்டத்திற்கு புறம்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரி இடம்பெற்றது பெரும் சர்ச்சையானது. பல்வேறு தரப்பினரும் முதல்வர் ஸ்டாலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதேபோல் அதிமுக விடுத்துள்ள கண்டன செய்தியில், "வேலூரில் ஓடும் ரயிலில் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணின் தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த ஸ்டாலின் மாடல் அரசுக்கு பொறுப்பு என்பது கொஞ்சம் கூட இல்லையா? 

பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் வெளியிடப்படக்கூடாது என்ற அடிப்படை விதி மீண்டும் மீண்டும் மீறப்படுவது ஏன்?

ஏற்கனவே கருவில் இருந்த குழந்தையை இழந்து தவிக்கும் குடும்பத்தை, மேலும் காயப்படுத்தியுள்ள இந்த திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்" என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM Stalin Announce mistake ADMK


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->