வெளியான மரண செய்தி., வேதனையில் தமிழக முதல்வர் ஸ்டாலின்.!
cm stalin mourning to Kathak dancer Pandit Birju Maharaj
இந்திய சினிமாவில் புகழ்பெற்ற கதக் நடன இயக்குனர் பண்டிட் பிர்ஜூ மகாராஜ் இன்று உடல் நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.
இவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "புகழ்வாய்ந்த கதக் நடனக் கலைஞர் பண்டித பிர்ஜு மகாராஜ் அவர்கள் மறைந்ததை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
கதக் கலையின் மிகச் சிறந்த தூதராக விளங்கிய அவர் வளமான ஒரு மரபைக் கொடையாக விட்டுச் சென்றுள்ளார்.
பண்டித பிர்ஜு மகாராஜ் மறைவு நமது நாட்டுக்கும் கதக் கலைக்கும் மிகப் பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ஆர்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
83 வயதான கதக் நடன இயக்குனர் பண்டிட் பிர்ஜூ மகாராஜ் தமிழில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் திரைப்படத்தின் 'உன்னை காணாது நான்' என்ற பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்த பாடலுக்காக அவர் தேசிய விருதையும் பெற்றுள்ளார்.
இவர் நடன இயக்குனர் பாடகர் மற்றும் நடனம் என பன்முகத்திறமை கொண்டவர். இவர் பத்ம விபூஷன் விருது, உசைப் மங்கேசுகர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார்.
English Summary
cm stalin mourning to Kathak dancer Pandit Birju Maharaj