நாம் அனைவரும் ஒன்றிணைந்து "யாதும் ஊரே, யாவரும் கேளீர்" என்ற பாதையில் பயணிப்போம் - முதலமைச்சர் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், இன்று நடைபெற்ற மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கும் 30-வது தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாம் அனைவரும் ஒன்றிணைந்து யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்ற பாதையில் பயணிப்போம் என்று தெரிவித்துள்ளார். 

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தை அடுத்த கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், இன்று காலை 10 மணியளவில் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கும் 30-வது தென்மாநில கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில முதலமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தின் போது பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்ததாவது,

"ஜி.எஸ்.டி. அமலாக்கத்துக்கு பிறகு மாநிலங்களுக்கு நிதிசுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே, ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகைக்கான கால அவகாசத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும்.  தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

மேலும், வெள்ள பாதிப்பு போன்ற மாநில அரசுகளின் தேவைகளுக்கான நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். மத்திய அரசின் மின்சார சீர்திருத்த சட்டத்தால் நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள். எனவே, மின்சார சீர்திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

சென்னை, தூத்துக்குடி, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தி வருகிறோம். மேலும், அண்டை மாநிலங்களை இணைக்கும் வகையில் அதிவேக ரெயில் வழித்தடத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையில் உறுதியாக உள்ளோம். தென்மாநில மொழிகள் திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்தவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்ற பாதையில் பயணிப்போம்". என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cm stalin say about travel path of Yadum Ure Yavarum Keleer


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->