சாப்பிட்ட மிச்சத்தை மீண்டும் அதே பாத்திரத்தில் உதறிவிட்டு போவதெல்லாம்... முதல்வர் ஸ்டாலினின் வைரல் வீடியோ! அதிமுக தரப்பில் கண்டனம்! - Seithipunal
Seithipunal


இன்று காலை, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திடீரென சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில்ஆய்வு  மேற்கொண்டார். 

ஏழை எளிய மக்கள் பயன் பெறுவதற்காக பசி ஆறுவதற்காக அம்மா உணவகங்கள் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களால் 2013ஆம் ஆண்டு அறிமுகம் படுத்தப்பட்டது. அம்மா உணவகங்களின் உணவின் தரம் குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் இந்த ஆய்வை செய்துள்ளார்.

ஆய்வுக்குப்பின் முதல்வர் முக ஸ்டாலின் தனது X பக்கத்தில், நாம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் எனப் புரளிகளைக் கிளப்பியது ஒரு கூட்டம். அவர்களது தீய எண்ணங்களுக்கு இடமளிக்காமல், கடந்த மூன்றாண்டுகளில் 450 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிட்டு, நாளொன்றுக்கு ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோரின் பசியாற்றும் நடவடிக்கைகளை நமது அரசு மேற்கொண்டிருக்கிறது.

இன்று தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அம்மா உணவகம் ஒன்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மக்களிடம் உணவின் தரம் குறித்தும்; அங்குள்ள பணியாளர்களிடம் அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தேன். அதையொட்டி, சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு 7 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாகப் பாத்திரங்கள் மற்றும் சமையல் கருவிகள் வாங்கவும் – அம்மா உணவகங்களைப் புனரமைத்திட 14 கோடி ரூபாய் ஒதுக்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அதிமுக ஐடி விங்க் செயலாளர் ராஜ் சத்யன் தனது X பக்கத்தில், "ஏழை எளிய மக்களின் அட்சயப்பாத்திரமாக விளங்கும் அம்மா உணவகத்தில் பெயரளவில் போட்டோஷூட்டுக்காக ஆய்வு செய்வதால் யாருக்கு என்ன பயன்?

நாடாளுமன்றத் தேர்தலில் 6% வாக்குகள் சரிந்ததும் ஆந்திர மாநிலத்தில் நடந்தது தனக்கும் நடக்கும் என்ற பயம் வந்துவிட்டதா? அதுவும் ஆய்வுக்கு வந்த இடத்தில் சாப்பிட்ட மிச்சத்தை மீண்டும் அதே பாத்திரத்தில் உதறிவிட்டு போவதெல்லாம் என்ன மாதிரியான மனநிலை?

விளம்பரப் பிரியருக்கு எளியவரின் அட்சயபாத்திரத்தின் அருமை எப்படி தெரியும்? உணவின் அருமையும், மக்களின் தேவையும் அறிந்த ஒரே தலைவர் அண்ணன் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான் என்பதை மக்கள் நன்கு அறிவர்" என்று ராஜ் சத்யன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin Visit Amma Unavagam issue ADMK Side Condemn


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->