#வேலூர் | கிறிஸ்டின் மருத்துவக் கல்லூரியில் (CMC) கொடூரம் - ஜட்டியோடு மாணவர்களை ஓடவிட்டு ராகிங்!
CMC Ragging Issue
வேலூர் கிறிஸ்டின் மருத்துவக் கல்லூரியில் ராகின் செய்த ஏழு மாணவர்களை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் பிரபலமான மருத்துவ கல்லூரி என்றால், அது சிஎம்சி என்று சொல்லப்படக்கூடிய கிறிஸ்டின் மருத்துவ கல்லூரி தான்.
இந்த கல்லூரியின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில், சீனியர் மாணவர்களால் அரை நிர்வாணப்படுத்தி, மாணவர்கள் விடுதியின் வளாகத்தை சுற்றிலும் எங்களை ஓடவிட்டு விட்டு, எங்கள் மீது தண்ணீர் பாய்ச்சி ராகிங் செய்துள்ளனர் என்று, ஜூனியர் மாணவர்கள் வீடியோ ஒன்றை பதிவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து சீனியர் மாணவர்கள் ஏழு பேர் தற்போது, இந்த புகாரின் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், தலைநகர் டெல்லியில் உள்ள ராகின் தடுப்பு துறைக்கும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.