கோவை தொழிலதிபர் அவமதிக்கப்பட்டிருக்கிறார் - ராகுல் காந்தி கண்டனம்! - Seithipunal
Seithipunal


கோவை கொடிசியாவில்  தொழில் முனைவோர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா உணவக நிர்வாக இயக்குநர் சீனிவாசன், இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. உள்ளது. ஆனால் காரத்திற்கு 12 சதவீதம் இருக்கும் நிலையில், இந்த முரண்பாடு களையப்பட வேண்டும் என்று கூறினார். 

மேலும்  Bun-க்கு  ஜி.எ.ஸ்.டி இல்லாத நிலையில், அதற்கு உள் வைக்கும் க்ரீமுக்கு 18 சதவீதம் ஜி.எ.ஸ்.டி உள்ளது. இந்த நிலையில், க்ரீமை கொண்டு வா நானே வச்சிக்கிறேன் என்று வாடிக்கையாளர் கூறியதாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் கடை நடத்த முடியல மேடம் என்றும், ஒரே மாதிரி வையுங்கள் என்று தனது ஆதங்கத்தை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தள பதிவில், கோயம்புத்தூரில் உள்ள அன்னபூர்ணா உணவகம் போன்ற ஒரு சிறு வணிகத்தின் உரிமையாளர், அரசு ஊழியர்களிடம்  ஜிஎஸ்டி முறையைக் கேட்கும்போது, அவரது கோரிக்கை ஆணவத்துடனும் முற்றிலும் அவமரியாதையுடன் சகித்துக்கொண்டிருக்கிறார்கள். கடைசியாக அவர்கள் தகுதியானது மேலும் அவமானம் தான்.

ஒரு கோடீஸ்வர நண்பர் விதிகளை வளைக்க, சட்டங்களை மாற்ற  முற்படும்போது, மோடி சிவப்புக் கம்பளம் விரிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், பணமதிப்பு நீக்கம், அணுக முடியாத வங்கி முறை, பேரழிவு தரும் ஜிஎஸ்டி போன்றவற்றின் தாக்கங்களை நமது சிறு வணிக உரிமையாளர்கள் ஏற்கனவே சகித்துக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார். 

மேலும் அதிகாரத்தில் இருப்பவர்களின் பலவீனமான ஈகோக்கள் புண்படுத்தப்படும்போது, அவர்கள் என்ன செய்வார்கள் என்பது கண்கூடாக தெரிகிறது என்றும்,  திமிர்பிடித்த அரசாங்கம் மக்கள் சொல்வதைக் கேட்டால், எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியால் லட்சக்கணக்கான வணிகர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்பதை புரிந்துகொள்வார்கள் என்று தெரிவித்துள்ளர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore businessman has been insulted Rahul Gandhi condemns


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->