காங்கிரஸ் களமிறங்கும் 10 தொகுதிகள்.. கோவை யாருக்கு? முழு விவரம் இதோ.!! - Seithipunal
Seithipunal


தமிழ் நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் தமிழ்நாட்டில் ஒன்பது நாடாளுமன்ற தொகுதிகளும் புதுச்சேரியில் ஒரு நாடாளுமன்ற தொகுதியும் என 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட அதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி கன்னியாகுமரி, விருதுநகர், மயிலாடுதுறை, ஆரணி, தேனி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் அல்லது தென்காசி, கோவை அல்லது கடலூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று கடலூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய தொகுதிகளில் திமுக போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று கடந்து முறை காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட கரூர் தொகுதி இந்த முறை திமுக களம் காண உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress contest constituency list in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->