காங்கிரஸ் மகாத்மா காந்தியின் கொள்கையை பின்பற்றுகிறது - பிரியங்கா காந்தி!!
Congress follows Mahatma Gandhi policy by Priyanka Gandhi
இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும் ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் மே 7ஆம் தேதி மூன்றாம் கட்டம் வாக்குப் பதிவும் மே 13ஆம் தேதி நான்காம் கட்ட மக்களவை தேர்தலும் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்தநிலையில், 5ம் கட்ட மக்களவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி உள்ளது. அந்தவகையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ரேபரேலிலில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி பேசுகையில், ராமர்கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாத காரணத்திற்காக அவர்கள் எங்களை இந்து மத விரோதி என்று கூறுகிறார்கள். நாங்கள் இறக்கும் தருவாயிலும் ஹே ராம் என்று கூறிய மகாத்மா காந்தியின் கொள்கையை பின்பற்றுகிறோம் என்று கூறினார்.
English Summary
Congress follows Mahatma Gandhi policy by Priyanka Gandhi