ஜி23 இப்போது ஜி22 ஆனது.! காங்கிரஸ் கட்சிக்கு முற்றாக முழுக்கு போட்ட பெரும்புள்ளி.!
congress kapil sibal resign
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல், அக்கட்சியில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்துள்ளார். மேலும், அவர் கடந்த மே 16-ஆம் தேதியே விலகிவிட்டதாகவும், தான் ஒரு சுதந்திரக் குரலாக ஒலிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 57 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில், இன்று உத்தரப் பிரதேசத்தில் இருந்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிட கபில் சிபல் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்த வேட்புமனு தாக்களுக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவிக்கையில், "மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட சுயேட்சை வேட்பாளராக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளேன். எப்போதுமே நாட்டில் சுதந்திரமான குரலாக ஒலிக்க நான் விரும்புகிறேன்.
கடந்த மே 16-ஆம் தேதியே நான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிவிட்டேன். நரேந்திர மோடி ஆட்சியை அகற்ற வலுவான கூட்டணி ஒன்று வேண்டும். எனக்கு இப்போதும், எப்போதும் ஆசம் கான் உறுதுணையாக இருக்கிறார். நன்றி" என்று கபில் சிபல் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருந்த ஜி23 மூத்த தலைவர்கள் அடங்கிய குழுவில் கபில் சிபல் முக்கியமானவர். அவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருப்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
English Summary
congress kapil sibal resign