சட்டமன்ற இடைத்தேர்தல் : விளாங்கோடு தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 18வது மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலும் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. இன்று மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பர்ட், பாஜக கூட்டணி சார்பில் நந்தினி, அதிமுக சார்பில் ராணி, மற்றும்  நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெமினி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 சுற்றுகள் கொண்ட வாக்கு எண்ணிக்கையில் இதுவரை 2 சுற்றுகள் முடிவடைந்துள்ளன.

இந்நிலையில் இதுவரை முடிந்துள்ள 2 சுற்றுகளில் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் 9403 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இதையடுத்து 2ம் இடத்தில் பாஜக வேட்பாளர் நந்தினி 3411 வாக்குகள் பெற்றுள்ளார். 3ம் இடத்தில் அதிமுக வேட்பாளர் ராணி 754 வாக்குகள் பெற்றுள்ளார்.

முன்னதாக விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ வாக இருந்த காங்கிரஸ் காதசியைச் சேர்ந்த விஜய தாரணி, சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். அத்துடன் தனது எம்எல்ஏ பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress Lead in Vilavancode Assembly ByElection


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->