ராமரை விட ராகுல் காந்தியின் நடை பயண தூரம் அதிகம்! - Seithipunal
Seithipunal


ராகுலை ராமருடன் ஒப்பிட்டு பேசிய காங்கிரஸ் தலைவர்!

ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மேற்கொண்டுள்ள நடைபயணத்தையும் ராமர் அயோதியிலிருந்து இலங்கைச் சென்ற நடை பயணத்தையும் ஒப்பிட்டு ராஜஸ்தான் மாநில அமைச்சர் பிரசாதி லால் மீனா பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது ராகுலின் பாதை யாத்திரை வரலாற்று சிறப்பு மிக்கது. ராமர் அயோத்தியில் இருந்து பாதயாத்திரையாக நடந்து இலங்கைக்கு சென்றார். இந்த தூரத்தை காட்டிலும் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்ளும் தூரம் அதிகம் என கருத்து தெரிவித்திருந்தார்.

ராஜஸ்தான் அமைச்சரின் கருத்துக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் ஆதரவு கரம் நீட்டி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் "ராமரும் பாதயாத்திரை மேற்கொண்டார். ராகுலும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். சங்கராச்சாரியாரும் பாதயாத்திரை மேற்கொண்டார். இதனால் கடவுள் ராமரையும் ராகுல் காந்தியையும் ஒப்பிட்டுப் பேசவில்லை. இருவரின் பெயரிலும் முதல் எழுத்து ஒன்றாக இருப்பது தற்செயலாக அமைந்தது. நாங்கள் ராகுலை கடவுள் ராமருடன் ஒப்பிட்டு பேசுவதாக பாஜகவினர் விமர்சனம் செய்கின்றனர். ஆனால் பாஜக தலைவர்கள் தங்களது தலைவர்களை கடவுள் என பேசி வருகின்றனர். ராகுல் மனிதன். மனித நேயத்திற்காக உழைத்து வருகிறார். அதனை அனைவரும் பார்க்கின்றனர். ராகுலின் பாதயாத்திரை ஏராளமான மக்கள் கலந்து கொள்கின்றனர்," என மகாராஷ்டிரா மாநில தலைவர் பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress leader compared Rahul with Rama


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->