கேரளாவில் உறுதியாகியது காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி..! முதல் வெற்றியை பதிவு செய்யுமா பாஜக!? - Seithipunal
Seithipunal



18வது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று பரபரப்பாக நாடு முழுவதும் நடந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் இருக்கிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தொடர்ந்து அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. மொத்தமுள்ள 20 இடங்களில் தொடர்ந்து 17 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது. கேரள வயநாட்டில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 1.2 லட்சம் வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். 

இந்நிலையில் கேரளாவின் திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி பாஜக சார்பில் போட்டியிடுகின்றார். இவர் அந்த தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். திருச்சூர் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் சிபிஐ கட்சிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபி வெற்றி பெற்றால் அது பாஜகவின் முதல் வெற்றியாக பதிவு செய்யப்படும். இந்நிலையில் கேரளா மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், பாஜக தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்று எதிர்ப்பார்ப்பு அம்மாநிலத்தில் எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress Leads and Confirmed Their Victory in Kerala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->