அதிமுகவுடன் கூட்டணி? திமுக அமைச்சரவையில் காங்கிரஸ்? திருநாவுக்கரசர் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


திருமணம் செய்து குடும்பம் நடத்தி கொண்டிருக்கும் தம்பதியினரிடம் இன்னொருவரை காட்டி அவரை கல்யாணம் செய்து கொள்வீர்களா? என கேட்பது போல நாங்கள் திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் போது அதிமுகவுடன் கூட்டணியா என கேட்பது தவறு என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்‌.

தமிழ் திரைப்படத்துறையில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் என்ற பெருமைக்குரிய நடிகர் சிவாஜி கணேசனின் நினைவுநாளையொட்டி நேற்று மதுரையில் உள்ள சிவாஜி சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் எம்.பி. திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருநாவுக்கரசர், "தேசிய அளவில் எப்படி காங்கிரஸ் பெரும்பான்மையான கட்சியோ அதே போன்று மாநில அளவில் திமுக பெரும்பான்மையான கட்சி. திமுகவிற்கும் எங்களுக்கும் இடையே கூட்டணி நல்ல முறையில் இருந்து வருகிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்ட போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வெளியில் இருந்து எங்களுக்கு ஆதரவு கொடுத்தார்.

காங்கிரஸ் 2026-ஆம் ஆண்டு கட்டாயமாக அமைச்சரவில் இடம் பெற வேண்டும் என்று சொல்ல முடியாது. இவ்வாறு பேசுவதும் ஒன்றும் தவறு கிடையாது. இது போன்று கூட பேசாமல் எப்படி‌ கட்சியை வளர்க்க முடியும்? எம்.எல்.ஏ மற்றும் எம்.பி எண்ணிக்கையில் பற்றாக்குறை ஏற்பட்டால்தான் அமைச்சரவையில் இடம் குறித்து பிரச்சினை வரும்.

தமிழகத்தில் உள்ள மக்களுக்கு மட்டுமே 100 சதவீதம் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது தவறு. வேற்று மாநிலங்களை சேர்ந்த மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்பது ஏற்கத்தக்கது அல்ல. இப்படி இருந்தால் இந்தியா எப்படி ஒற்றுமையான நாடாக இருக்க முடியும். 

அதிமுகவையோ அல்லது சசிகலாவையோ விமர்சித்து பேச நான் விரும்பவில்லை. ஏனென்றால், அதிமுகவில் ஏற்கனவே பல பிரச்னைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதில் நான் எதையாவது பேசி புது பிரச்சனையை உருவாக்க விரும்பவில்லை. தேவைப்பட்டால் அவர்களை பற்றி பேசுவேன் 

ராகுல் காந்தி தான் பிரதமராக வேண்டும் என ஸ்டாலின் தான் முதன் முதலில் குரல் கொடுத்தார். காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. எம்எல்ஏ, எம்பி தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம்.

திருமணம் செய்து குடும்பம் நடத்தி கொண்டிருக்கும் தம்பதியினரிடம் இன்னொருவரை காட்டி அவரை கல்யாணம் செய்து கொள்வீர்களா? என கேட்பது போல நாங்கள் திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் போது அதிமுகவுடன் கூட்டணியா என கேட்பது தவறானது. 

மின் கட்டண உயர்வு ஏழை மக்களுக்கு மிகவும் பாதிப்பாக உள்ளது‌. மாநில அரசு மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மக்களை வலிமைப்படுத்திய பிறகு மத்திய மற்றும் மாநில அரசுகள் மின் கட்டணத்தை உயர்த்தலாம்". இவ்வாறு அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress MP thirunavukkarasar say about ADMK alliance DMK cabinet


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->