மொத்தமா தூக்குங்க! காங்கிரஸ் தலைகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


கடந்த இரண்டு மக்களவைத் தேர்தலில் படு தோல்வியை சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சி. அடுத்து 2024 -ல் நடக்க உள்ள மக்களவை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளது.

நடக்க உள்ள இந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி மாநில கட்சிகளை சார்ந்து, தனது வெற்றிக்கான யூகத்தை வகுத்து வருகிறது. ஆனால், மாநில கட்சிகளோ ஆளுக்கு ஆள் பிரதமர் என்ற ஆசையில், காங்கிரசின் கூட்டணி வியூகத்தில் கும்மி அடித்து கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஆகிய முக்கிய மூன்று மாநில தலைவர்களும், பிரதமர் ஆகும் கனவில் மிதந்து வருகின்றனர். 

இதன் காரணமாக காங்கிரஸ் எதிர்பார்க்கும் கூட்டணி அமையாமல் போகும் என்றும், பாஜகவின் வெற்றிக்கு இது வித்திடும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் 13 மாநில தலைவர்களை மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி குஜராத், மராட்டியம், டெல்லி, உத்தரகாண்ட், நாகலாந்து, திரிபுரா, அசாம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 13 மாநில தலைவர்களை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் மாற்றப்படக்கூடிய புதிய தலைவர்களின் கீழ், அந்தந்த மாநிலங்களில் புதிய நிர்வாகக் குழுவை ஏற்படுத்தவும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார் ஜூனா கார்கே ஆலோசனை செய்து வருவதாக டெல்லி வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

மேலும் தேசிய அளவில் 9 பொதுச் செயலாளர்களையும் மாற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்த கோப்புகள் ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்களின் முடிவு வெளியானதும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress new plan for 24 election 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->