கே.எஸ் அழகிரியை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் ராஜினாமா! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவராக காமராஜ் இருந்து வருகிறார். இன்று கோவில்பட்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அந்த சந்திப்பில் "காங்கிரஸ் கட்சியில் உட்கட்சித் தேர்தல் ஜனநாயக ரீதியில் நடைபெறவில்லை. பணம் வாங்கிக்கொண்டு பொறுப்புகள் போடப்பட்டுள்ளது. மாவட்ட தலைவர்களுக்கு தெரியாமல் கலந்து ஆலோசிக்காமல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த 15ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடந்த பிரச்சனை தொடர்பாக மாவட்ட தலைவர்களிடம் எந்தவித ஆலோசனை நடத்தாமல் கட்சியின் பொருளாளர் ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க தனிச்சையாக முடிவெடுத்துள்ளனர். ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது கண்டித்து ஒரு அறிக்கை கூட மாநில தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிடவில்லை. அவர் தனது கோரிக்கை மட்டுமே பெரிதாக நினைக்கிறார். 

காங்கிரஸ் கட்சி வளர்ச்சி தொடர்பாக கேட்க வரும் கட்சி தொண்டர்களை அடிக்கும் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைமை உள்ளது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பதவியில் தொடர விரும்பவில்லை என்று எனது ராஜினாமா கடினத்தை மாநில தலைவருக்கு அனுப்பி உள்ளேன்" என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress Partys Tuticorin North District President resigned


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->