ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சி?...தேர்தல் ஆணையம் பரபரப்பு அறிக்கை! - Seithipunal
Seithipunal


ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் முதற்கட்டமாக காஷ்மீரில் 16 தொகுதிகள் மற்றும்  ஜம்முவில் 8 தொகுதிகள் என 24 தொகுதிகளுக்கு முதல் கட்ட சட்டசபை தேர்தல் கடந்த 18-ம் தேதி  நடைபெற்றது.

தொடர்ந்து 2ம் கட்ட சட்ட சபை தேர்தல் கடந்த 25-ம் தேதி தொடங்கியது. ஜம்முவில் 11 தொகுதிகள், காஷ்மீரில் 15 தொகுதிகள் என மொத்தம் 26 தொகுதிகளுக்கு தேர்தல்   நடைபெற்றது.

மேலும் 3-வது மற்றும் இறுதி கட்ட தேர்தல் இந்த மாதம் 1-ம் தேதி நடைபெற்றது. காஷ்மீரில் ஒட்டுமொத்த வாக்கெடுப்பு சதவீதம் 63.45 சதவீதமாக உள்ளதாக  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கான வாக்குப்பதிவு முடிவுகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையம் இன்று காலை நேர நிலவரப்படி வெளியிட்டுள்ள செய்தியில், காஷ்மீரில், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை தொகுதிகளை கடந்து 47 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இருந்த போதிலும் பாஜக 28 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து இன்று மதியம் அல்லது மாலைக்குள் யார் ஆட்சியை பிடித்து முதலமைச்சர் ஆவார் என்பது தெரிந்து விடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress rule in jammu and kashmir election commission sensational report


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->