திமுகவுடன் தொகுதிப் பங்கீடு: நாள் குறித்த இந்திய கம்யூனிஸ்ட்! - Seithipunal
Seithipunal


திமுக-இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை வருகின்ற பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெற உள்ளது.

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 

தமிழகத்தில் காங்கிரஸ், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இந்த இரு கட்சிகளும் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று முதல் கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. 

இந்த பேச்சுவார்த்தை சுமூகமாகவும் திருப்திகரமாகவும் இருந்ததாக திமுக, காங்கிரஸ் தெரிவித்தன. அதே சமயத்தில் காங்கிரஸ் தரப்பில் திமுகவிடம் தமிழகம், புதுச்சேரியை சேர்த்து 12 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில் காங்கிரசை தொடர்ந்து திமுக-இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை வருகின்ற பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இந்த பேச்சு வார்த்தையில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுப்பராயன் எம்பி., முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி, மாநில துணைச் செயலாளர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Constituency distribution Communist Party of India talks with DMK


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->