தொகுதி பங்கீடு: திமுக-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே 2 ஆம் கட்ட பேச்சு வார்த்தை!
Constituency distribution DMK Communist Party of India
மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து தி.மு.கவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளது.
தொகுதி பங்கீடு குறித்து தி.மு.கவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று நடத்த உள்ளது.
ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே பேச்சு வார்த்தையை தி.மு.க தொடங்கியுள்ளது.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், தி.மு.க சார்பில் டி.ஆர். பாலு ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கினை ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்ய தி.மு.க திட்டம் தீட்டி உள்ளது. இதனால் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
English Summary
Constituency distribution DMK Communist Party of India