பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை அழித்துவிடும் - ராகுல் காந்தி குற்றசாட்டு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் 7கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்தவகையில், ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்ட வாக்குபதிவும் ஏப்ரல் 26ம் தேதி இரண்டாம்கட்ட வாக்கு பதிவு நடைபெற்று முடிந்தநிலையில், மூன்றாம்கட்ட மக்களவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகியுள்ளது. அனைத்துகட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில்,மத்திய பிரதேசம் மாநிலம், பிண்ட் நகரில் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், மக்களவை தேர்தல் என்பது ஒரு சாதாரணமான தேர்தல் அல்ல. நல்ல சித்தாந்ததிற்கும் கெட்ட சித்தாந்ததிற்கு நடக்கும் போராகும்.

அனைத்து தரப்பு மக்களும் அரசியல் சாசனத்தால்தான் பல்வேறு உரிமைகளை பெறுகின்றனர். மக்களுக்கான இடஒதிக்கீடு, நில உரிமைகள் போன்ற பல்வேறு விஷயங்களை  அரசியல் சாசனம்தான் அளிக்கிறது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தைக் கிழித்து தூக்கியெறிந்து விடும் என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Constitution destroy bjp by Rahul Gandhi accuses


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->