#BigBreaking || பள்ளி, கல்லூரிகள் மூடல், திரையரங்கு, உடற்பயிற்சிக் கூடங்கள் மூடல்., விரைவில் வெளியாகப்போகும் அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், தலைநகர் டெல்லியில் பகுதி ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் அதிகமாகி வரும் நிலையில், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பகுதி ஊரடங்கு அமல்படுத்துவதற்கு, டெல்லி அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், திருமண மற்றும் விருந்து மண்டபங்கள், பள்ளி- மற்றும் கல்லூரிகளை மூட டெல்லி அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், அத்தியாவசிய மற்ற கடைகளை சுழற்சி முறையில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க மட்டும் அனுமதி வழங்க உள்ளதாகவும் அந்த பரபரப்பு தகவல் தெரிவிக்கின்றது.

மேலும், உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கவும் டெல்லி அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona omicron issue delhi lockdown


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->