ஜல்லிக்கட்டில் "அமைச்சர் மூர்த்தி அரசியல்" செய்கிறார்.!! மாடுபிடி வீரர் பரபரப்பு குற்றச்சாட்டு.!! - Seithipunal
Seithipunal


மதுரையில் நேற்று நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 7:00 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 5:00 மணி வரை மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியானது மாலை‌ 6:30 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது.

இந்த நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மதுரை மாவட்டம் கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 18 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. அதேபோன்று சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அபிசித்தர் காளைகளை அடக்கி இரண்டாம் இடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது.

கார்த்திக் தனது 2022 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்தவர், அதேபோன்று அபி சித்தர் கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்தவர். நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் அமைச்சர் மூர்த்தியின் அரசியல் விளையாட்டால் தனது முதல் பயணம் பறிபோனதாக இரண்டாம் இடம் பிடித்த அபிசித்தர் குற்றம் சாட்டியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அபிசித்தர் "நான் சிவகங்கை மாவட்டம் பூவந்தி கிராமத்தை சேர்ந்தவர். கடந்த 2023 ஆம் ஆண்டு இதே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 30 காளைகளை அடக்கி முதல் பரிசு வாங்கினேன் ஆனால் 26 மாடுகள் தான் பிடித்ததாக அறிவித்தார்கள். அப்போதும் அரசியல் பண்ணிட்டாங்க.

இந்த அரசு அரசியல் தான் பண்றாங்க, இதற்கு முழு முழு காரணம் அமைச்சர்களின் தான்.  போன வருஷம் கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்தி ரெக்கமண்டேஷனில் உள்ளே வந்தார். வேணுமென்றால் சக வீரர்களை கேட்டு பாருங்க. இன்னைக்கும் கார்த்தி ரெகமெண்ட்டில் தான் உள்ளே வந்துள்ளார். அவர் மூணு பேட்ஜில் மாடுகளை பிடித்து இருக்கிறார். 

நான் இரண்டு பேஜ் மாடுகளை மட்டுமே பிடித்துள்ளேன். அவர் எப்படி மூன்று பேச்சி மாடுகளை பிடிக்கலாம் என கேட்டதற்கு என்னை தகாத வார்த்தைகளால் போலீசார் திட்டினர், விரட்டியடித்தனர். நான் 17 மாடுகளை அடக்கியுள்ளேன் அவரும் 17 மாடுகளை அடக்கி உள்ளார். இதை கண்டறியாமல் விழா கமிட்டியினர் கார்த்திக்கு முதல் பரிசு கொடுத்துவிட்டார்கள்.

இது முழுக்க முழுக்க அமைச்சரின் சதி, விளையாட்டை விளையாட்டாக வைத்திருக்க வேண்டும் இதில் அரசியல் வைத்து விடக்கூடாது நான் நீதிமன்றத்துக்கு போக போகிறேன். வீடியோ பார்த்து யார் முதலிடம் என கண்டறிந்து, அதே இடத்தில் மேடை போட்டு முதல் பரிசை அறிவிக்க வேண்டும்" என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cowboy alleged on minister moorthy made politics in jallikattu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->